ஆசிரியர் தினம்
ஆசிரியர்களே இந்த நாட்டின் மூளை என கூறிய டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளியே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
கற்றலும் கற்பித்தலுமே இவ்வுலகம் இன்றும் வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கு ஆதாரமாக இருக்கிறது. அத்தகைய இவ்வுலகை வளர்ச்சி பாதையில் செலுத்தும் தூண்டுகோலாக, படிக்கட்டுகளாக இருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
இங்கு நமது முதல் ஆசிரியர் அம்மாவும் அப்பாவுமே. அவர்களே இவ்வுலகை காண்பிக்கின்றனர், யாரை எவ்வாறு அழைக்கவேண்டம் என்பதில் தொடங்குகிறது அவர்களது கற்ப்பித்தல்.
தற்போது உள்ளதைப்போல் தினமும் பள்ளிக்கூடம் சென்று புத்தகங்களை மனனம் செய்யாமல், முன்னாட்களில் கற்றல் என்பதே தனி அனுபவமாக இருந்தது. அப்பாவிடம் எல்லோரிடம் எப்படி பேசுவது பழகுவது என்று கற்ற பின், அவரே நமக்கு சரியான ஆசானையும் காட்டுகிறார்.
முன் நாட்களில், ஆசிரியர் இருக்கும் இடம் தேடி சென்று அவ்விடமே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்து அவரின் நன்மதிப்பை பெற்று கல்வி பயின்றனர். ஆனால் இப்பொழுதோ, ஒரு பொதுவான இடத்திற்கு ஆசிரியரும் மாணவரும் சென்று கற்க்கின்றோம். இப்பொழுது அனைத்தும் வணிகமயமாகிவிட்ட நிலையில், ஆசிரியர் மாணவரின் இடம் தேடி வந்து கற்ப்பிக்கின்றார்.
இப்பதிவை நான் எழுத முற்பட்டதே இந்த முட்டாளையும் கற்பித்தது, அறிவு புகட்டிய ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி கூறவே.
முதலில் எனக்கு கற்பனை திறனை ஊட்டி, ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து என்னை உற்சாகமூடிய என் அப்பா. அவரே என் முதல் ஆசிரியர். எனக்குள் இன்னும் கொஞ்சமேனும் உயிர்ப்புடன் கற்பனை திறன் உள்ளது எனில் அதற்கு அவரே காரணம். என் மனம் துவண்டுபோகும் நேரமெல்லாம், நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி தூக்கிவிட்டது என் அப்பாவும் அம்மாவுமே.
இரண்டாவது என் பெரியப்பா பெரியம்மா, தமிழின் மீதும் கணிதத்தின் மீதும் அதீத ஈடுபாடு காட்ட எனக்கு உதவியவர்கள். பாடமென்றால் பாகற்காயாய் நினைக்கும் என்னையும் தட்டி தேற்றி விட்டதில் அவர்களின் பங்கு அளப்பரியது. என்னதான் நவீன கணிதத்தை உயர்வகுப்புகளில் கற்றாலும், இவர்களிடம் கற்ற கணிதமே எனக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கற்று கொடுத்தாலும், இவர்களே உடனடியாக நினைவிற்கு வருகிறார்கள், தமிழய்யா வில்லவன் மற்றும் பழனிச்சாமி. என்னதான் எட்டாம் பத்தாம் வகுப்புகளில் கட்டுரைகள் படித்து எழுதினாலும், அதில் நம்முடைய சொந்த நடையே நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுபவர் பழனிச்சாமி அய்யா. நான் ஐடியலில் படித்த காலத்தில், ஆங்கிலம் எனக்கு வேப்பங்காயாய் இருக்கும் போது, நான் கேள்விக்கு தொடர்பாக என்ன எழுதினாலும் அதற்க்கு மதிப்பெண் கொடுத்து, என்னையும் சொந்தமாக எழுத தூண்டியவர் ரங்கசாமி ஆசிரியர். இவராலேயே பொறியியல் படிப்பில் தேர்வுகளே எளிதாக எதிர்கொண்டேன், படிக்கவில்லையெனினும்.
கணிப்பொறி அறிவியலை பொறுத்தவரை என் முதல் ஆசிரியர் பெயர்மறந்த அந்த கணினி நிலைய பெண். பின் திரு முத்துக்குமார், திரு ரங்கராஜன்.
பொறியியல் பொறுத்தவரை அனைத்து ஆசிரியார்களையுமே ஏதேனும் ஒருவிதத்தில் குறிப்பிட்டாகவேண்டும். ஆனால், கண்டிப்பாக குறிப்பிடப்படவேண்டியவர்கள் விக்னேஷ், ருக்குமணி காந்தன், வெங்கட்குமார், சிந்தன், சரத்… இவர்கள் என் நண்பர்கள், ஒவ்வொரு தேர்வையும் வெற்றிபெற இவர்கள் தேர்வுக்கு முன் கொடுக்கும் விளக்கமே காரணமாக அமைந்தது என்ற அது பொய்யாகாது.
எது எப்படி இருப்பினும் கற்று கொடுத்த அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்… 🙂
குறிப்பு: ஒரு நல்ல பதிவை இவ்வளவு மொக்கையாக கொண்டுசென்றத்துக்கு நானே முழுபொறுப்பேற்று கொள்கிறேன்.
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply