இணையம் என்னும் வலை – 2
இணையத்தின் மறுபக்கத்திற்கு இரண்டு முகங்கள் உள்ளது, ஆழ்ந்த இணையம் (Deep Web), இருண்ட இணையம் (Dark Web). நாம் தற்பொழுது பயன்படுத்தும் இணையத்தில் 90% மேல் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால் மற்ற இரண்டும் தணிக்கை செய்யப்படாமல் சொல்லப்போனால் அதன் நீள அகலங்கள் என்ன என்பது இன்னும் தெளிவாக அதில் பயணிப்பவர்களுக்கே தெரியாது என்று நினைக்கிறேன். இனிவரும் தொடர்களில் பின்வரும் தலைப்புகளை பற்றியே சிலவற்றை ஆழ்ந்தும் சிலவற்றை மேலோட்டமாகவும் பார்க்க இருக்கிறோம்.
- இணையத்தில் பண மோசடிகள்
- இணையத்தில் தனிநபர் தரவுகள்
- இணையத்தில் ஆபாச தளங்கள்
- மெய்நிகர் தனியார் பிணையம் (VPN)
- ஆழ்ந்த இணையம் என்னும் Deep Web
- இருண்ட இணையம் என்னும் Dark Web
ஆனால் இதனுள் நாம் செல்லும் முன் இணையத்தில் ஒரு வலைத்தளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேலோட்டமாகவேனும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
இணையதளம் செயல்படும் முறை
கூகிள் (google.com), ஒரு சாதாரண இணைய பயன்பாட்டாளரில் இருந்து இணையத்திலேயே எந்த நேரமும் உலவும் வல்லுனர்வரை பிரௌசர் திறந்தவுடன் முதலில் போகும் தளம் இதுவாகத்தான் இருக்கும். இதனை கொண்டே நாம் இணையம் செயல்படுவதை அறிந்துகொள்ள போகிறோம்.
- பயனர் (User)
- இணைய உலவி (Browser)
- இணைய சேவை வழங்குபவர் (Internet Service Provider)
- இணையதள சேவையாகம் (Web Server)
- இணையதளம் (Website)
மேற்சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு புதிதாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு சின்ன விளக்கம்,
பயனர் (User) என்பவர் நீங்கள் தான். யார் இணையத்தை பயன்படுத்துகிறீர்களா அவர்களே பயனர்.
இணைய உலவி (Browser) என்பது நீங்கள் இணையதளத்தை பார்ப்பதற்கு பயன்படுத்தும் மென்பொருள், எடுத்துக்காட்டுக குரோம் (Google Chrome)
இணைய சேவை வழங்குபவர் (Internet Service Provider) என்பவர் உங்களை இணையத்துடன் இணைப்பவர், எடுத்துக்காட்டாக ஏர்டெல் (Airtel).
இணையதள சேவையாகம் (Web Server) என்பவர் உங்களுக்கு தேவையான இணையதளத்தை தங்களது கணினியில் வைத்திருப்பவர். எடுத்துக்காட்டாக கூகிள் (Google).
இணையதளம் (Website) என்பது உங்களுக்கு தேவையான தரவுகளை கொண்ட பக்கம். எடுத்துக்காட்டாக google.com
இணையத்தில் பண மோசடிகள்
இணையவழி பணப்பரிமாற்றம் வந்த பிறகு நிறுவனங்களுக்குள்ளும் தனிநபர்க்குள்ளும் பணப்பரிமாற்றம் மிக எளிதானது. இணையவழி பரிமாற்றம் எந்த அளவு எளிமையானதோ அந்த அளவு பாதுகாப்பு குறைவாகவும் இருந்தது. தற்போதைய தொழில் நுட்பங்கள் அதன் பாதுகாப்பை அதிகப்படுத்தினாலும், இன்னும் முழு பாதுகாப்பை நாம் எட்டவில்லை என்றே கூறமுடியும். ஏனெனில் அது தனிநபரின் விழிப்புணர்வை பொறுத்தே உள்ளது. என்ன என்ன மாதிரியான மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply