இணையம் என்னும் வலை – 1
இணையம் பற்றி அறியாதவர்கள் இங்கு யாரும் இல்லை என கூறும் அளவிற்கும் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்து இருக்கும் வலை இது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாமானியனுக்கும் இணையத்தை எளிமையாக்கியபின் இங்கு அனைத்தும் இணையமயமாகிவிட்டது. எங்கும் இணையம் வியாபித்து இருக்கும் இந்த காலகட்டத்தில், அதனால் அதீத நன்மைகளையும் அதையும் தாண்டிய தீமைகளையும் இம்மனித இனம் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. இணையத்தை ஓரளவேனும் புரிந்துகொண்டு அதை பற்றிய தொடர் எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை… இப்பொழுது ஒரு குறுந்தொடராக…
இணையத்தை தினமும் உபயோகிக்கும் பலருக்கும் அதன் வரலாறு தெரிவதில்லை. அதை தெரிந்துகொண்டு நாம் ஏதும் செய்துவிடப்போவதில்லை எனினும், அதன் வளர்ச்சி நம்மில் ஒரு வியப்பை ஏற்படுத்தும் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை. இணையத்தின் வரலாறு பற்றி பேசினால், இப்பதிவின் நீளம் அதிகமாகும் என்பதை கருத்தில்கொண்டு பின்வரும் இணைப்புகளை தருகிறேன், பொறுமையுடன் வாசிக்கவும். ஒவ்வொன்றிலும் சில மாறுதல்கள் இருந்தாலும், உலக வல்லரசான அமெரிக்க, தன்னுடை தேவைக்காக உருவாக்கியது இப்பொழுது உலகையே ஆண்டுகொண்டிருக்கிறது.
இணைப்புகள்:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
https://yourkattankudy.com/2012/02/23/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/
https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
http://storyoftheweb.org.uk/
தற்காலத்தில், இணையம் இன்றி இங்கு எதுவும் நடப்பது இல்லை என்று கூறும் அளவிற்கு அதன் தேவை மிகப்பெரியதாக இருக்கிறது. சராசரியாக ஒருவர் குறைந்தபட்சம் 4 மணிநேரமாவது இணையத்தை பயன்படுத்துவர் என்று கூறிவிட முடியும். ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதில் இருந்து, ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது முதல் பொழுதுபோக்குவரை இங்கு அனைத்துமே இணையமயமாகிவிட்டது. இதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. உணவு, உடை, உறைவிடம், இணையம் என்னும் அளவிற்கு அது மனித வாழ்வில் பின்னிப்பிணைந்துவிட்டது.
எனினும் இணையத்தின் அதீத வலையினுள் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதே உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை மாற்றி இணையம் இன்றி ஓர் அணுவும் அசையாது அன்று கூறும் காலத்தினுள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இணையம் தொலைவை குறைத்துள்ளது, எங்கோ இருக்கும் மகனிடம் தன் அருகில் இருப்பதை போன்று உரையாடிக்கொண்டிருக்கும் அம்மாக்கள் இங்கு அதிகம். இணையம் தொலைவையும் நேரத்தையும் குறைத்துள்ளது, அனைத்தையும் வேகப்படுத்தியுள்ளது.
ஒரு நுழைவு தேர்விற்கு விண்ணப்பம் அனுப்ப, வரிசையில் நின்றோ அல்லது அஞ்சல் எழுதி அனுப்பியோ விண்ணப்பம் வாங்கி, அதற்கு தேவையான ஆவணங்கள் இணைத்து, வங்கிகளில் வரிசையில் நின்று பணம் செலுத்தி, பின் வாங்கி வரைவோலை (DD) வாங்கி, அதை அஞ்சல் மூலமாக திரும்ப அனுப்பி, பின் வரும் நுழைவு சீட்டிற்க்காக காத்திருந்து, பின் சரியான நேரத்தில் அஞ்சல்காரரிடம் இருந்து கையொப்பமிட்டு பெறவேண்டும். இது முடிய 1 மாதம் கூட ஆகலாம், ஆனால் இப்பொழுது இந்த வேலை அனைத்தும் 15 நிமிடத்தில் முடிந்துவிடுகிறது, அதுவும் நாம் விண்ணப்பத்தை நிரப்ப மட்டுமே 12 நிமிடங்கள் எடுத்துக்கொள்வோம். மீதி இருக்கும் 3 நிமிடத்தில், மேற்சொன்ன 1 மாத வேலையும் முடிந்து விடுகிறது. இணைய முகவரி மூலமாக விண்ணப்பம், பணம் செலுத்த ஆன்லைன் பேங்கிங். ஒரு பிரிண்ட்அவுட்டில் நுழைவுச்சீட்டு என அனைத்தயும் சுருங்கி விட்டது.
ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் மற்ற வரிசையில் நிற்க தேவையில்லை, செய்தித்தாளை சுமந்துகொண்டு இருக்கவேண்டியதில்லை. ஏன் அதை, நாமே படிக்கக்கூட தேவையில்லை, கருவியே படித்து காண்பித்துவிடுகிறது. மின் விளக்கை ஏற்றுவதில் இருந்து வாகனங்களை தானாகவே ஓட்டிக்கொள்வதில் கூட இந்த இணையத்தின் பயன்பாடு இருக்கிறது. முன்பெல்லாம் பயணிக்கும் போது வழி தெரியவில்லை எனில், ஒவ்வொரு இடமாக நிறுத்தி வழிகேட்டு பயணிப்போம், இப்பொழுது எவ்விடத்தில் எவ்வளவு நெரிசல் என்பதில் இருந்து, எது குறுகிய பயணகாலம் உடைய பாதை என்பது வரை கைகளில் உள்ள அலைபேசியில் தெரிந்துவிடுகிறது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வுடன் கலந்து நம் வாழ்வியலை எளிதாக்கியிருக்கிறது.
இவ்வளவு உதவிபுரியும் இணையத்தின் மற்றொரு பக்கம் மிக கொடுமையானது. இந்த தொடரின் நோக்கமும் அதன் மற்றொரு முகத்தை அலசுவதே…
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply