கடந்து வந்த பாதை 2018
அனுபவமே சிறந்த ஆசான். ஒவ்வொரு வருடமும் நாம் கடந்து வரும்போது எதாவது ஒரு, மறக்க முடியாத அனுபவத்தையேனும் சுமந்து வருவோம். ஆனால், இந்த வருடம் எனக்கு பல பல மறக்க முடியதா அனுபவங்களை பரிசளித்திருக்கிறது. இன்பம் துன்பம் ஏமாற்றம் என பலவற்றை கடந்து வந்துவிட்டேன். வாழ்வு முழுவதும் அனுபவங்களால் ஆனது, அதற்கு இந்த கலவையான நிகழ்வுகளே உதவுகின்றன. உண்மையை சொல்லவேண்டுமெனில், இவ்வாண்டின் தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பல கேள்விகளுடனும் சங்கடங்களுடனுமே தொடங்கியது. நான் யாரை முழுமனதுடன் Read More
ஆசிரியர் தினம்
ஆசிரியர்களே இந்த நாட்டின் மூளை என கூறிய டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளியே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். கற்றலும் கற்பித்தலுமே இவ்வுலகம் இன்றும் வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கு ஆதாரமாக இருக்கிறது. அத்தகைய இவ்வுலகை வளர்ச்சி பாதையில் செலுத்தும் தூண்டுகோலாக, படிக்கட்டுகளாக இருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இங்கு நமது முதல் ஆசிரியர் அம்மாவும் அப்பாவுமே. அவர்களே இவ்வுலகை காண்பிக்கின்றனர், யாரை எவ்வாறு அழைக்கவேண்டம் என்பதில் தொடங்குகிறது அவர்களது கற்ப்பித்தல். தற்போது உள்ளதைப்போல் தினமும் பள்ளிக்கூடம் Read More
பொன்னியும் போராட்டமும்
இந்த பதிவுக்கு பொன்னியும் போராட்டமும் என்பதற்கு பதில் பொன்னியும் போலி அரசியலும் என்னும் தலைப்பே பொருத்தமாக இருக்கும். குடகு மலையில் பிறந்து கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் ஓடி, பாண்டிச்சேரியில் கடலாரசனுடன் கலக்கும் பொன்னி, தான் பார்க்குமிடமெங்கும் இயற்கையன்னையை குதூக்களிக்கவைக்கிறாள். அவள் தோன்றிய காலம் தொட்டு பல போர்களை பார்த்திருந்தாலும் அவளுக்காக நடக்கும் போராட்டம் என்ற பெயரிலான கலவரங்கள் புதிதாக இருக்கலாம். தன்னிடம் சரணடைத்தவர்களை வாழவைக்க மட்டுமே தெரிந்த அவளுக்கு, மனிதர்களின் பாவங்களை தான் எடுத்துகொண்டு வளப்படுத்திய அவளுக்கு Read More
கபாலிடா நெருப்புடா…
உண்மையாகவே கபாலி என்பது நெருப்பை போல உலகம் முழுவது பற்றிக்கொண்டுவிட்டது. கபாலி என்ற பேர் வெளிவந்தவுடன் புகைய ஆரம்பித்தது டீச்சரில் எரிய ஆரம்பித்து தேதி அறிவிக்கப்பட்டபின் நன்றாகவே கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டது. ஒருவேளை ஐந்து வருடம் கழித்து கபாலியா அப்படினா, என்னும் கேள்வி வந்தால், 99.99% வராது, ஒருவேளை வந்தால், கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம். எந்தபக்கம் பார்த்தாலும் கபாலி போஸ்டர், எங்க பாத்தாலும் நெருப்புடா நெருங்குடா னு வாசகம். Read More
பெண்கள் மீதான தாக்குதல்
பெண்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை கண்டு களையாமல் வெறுமனே ஆணாதிக்கம் என்று கூப்பாடு போடுவதால் ஒன்றும் நடந்துவிடாது. பெண்ணின் மீதான தாக்குதல்களுக்கு காரணம் யார் என்று வெளிப்படையாக பார்த்தால், அது ஆணை மட்டுமே சாரும். ஆனால் 20% குற்றம் வேண்டுமானால் அவனை மட்டுமே சார்ந்து இருக்கலாம், ஆனால் மீதி இந்த சமுதாயத்தை சார்ந்தேயிருக்கிறது. பெண்கள் என்றாலே பொதுவாக காதலித்து ஏமாற்றுபவர்கள் என்ற எண்ணத்தையும், அதற்கு ஆண்கள் பழிவாங்க வேண்டும் என்பதுபோன்றும் சினிமாக்களும் சீரியல்களும் குழந்தை Read More
கடவுளை காண்போம் – பகுதி 2
சென்ற பதிவில் கடவுள் யார் என்பதற்கான எனது புரிதல்களையும் புறம் பற்றியும் பகிர்ந்தேன், இந்த பதிவில் மனம் பற்றியான எனது புரிதல்களையும், கடவுளை உணரக்கூடியதர்கான நம்பிக்கை சார்ந்த புரிதல்களையும் பகிர்கிறேன்… எது மனம் ?என்னை பொறுத்தவரை நமக்குள் இருக்கும் ஆத்மா (உயிர்) அதாவது இயக்க சக்தியை மையமாக கொண்டு நம்மை சுற்றி பரவி இருக்கும் ஒரு ஈர்ப்பு விசை மனம். மனத்திற்கு எல்லைகள் கிடையாது நினைத்தமாத்திரத்தில் எங்கும் பரவும் ஆற்றல் மனத்திற்கு உண்டு. என்னுடைய புரிதல்படி மனதை அடக்கமுடியாது. Read More
கடவுளை காண்போம் – பகுதி 1
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தான் இருப்பதில்லை. அவரை உணரத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. இங்கு கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கடவுளை நுகர முற்படுபவர்களே. கடவுளை பற்றி உணர தொடங்கும் முன் அகம் புறம் பற்றிய அறிய வேண்டியது முக்கியமாகிறது. அறிவியல் ரீதியாகவும் சரி நம்பிக்கை ரீதியாகவும் சரி அகம் புறம் என்று இரு நிலைகள் இருப்பதை மறுக்க முடியாது. அகம் புறம் என்பது எல்லாவற்றிலும் இருப்பது. எதுவாகினும் அகம் புறத்திர்குள் Read More
நிர்வாணம்
பொதுவாக நிர்வாணம் என்பது அம்மணம். நம் அனைவருக்கும் நிர்வாணம் பற்றி தெரியும். சிலர் நிர்வாணத்தை அருவருப்பாக நினைப்பார்கள், ஆனால் நிர்வாணம் இல்லாமல் யாரும் இல்லை. நிர்வாணமும் கடவுளும் ஓன்று என நான் சொன்னால் என்னை அடிப்பதற்கு ஒரு படையே கிளம்பி விடும். சரி எது நிர்வாணம் ? மறைப்பதற்கு ஏதும் அற்ற நிலையை நிர்வாணம் என கொள்ளலாம் அல்லவா !!!. என்னை பொறுத்தவரை நிர்வாணம் இரண்டு வகைப்படும், அகம் புறம். புற நிர்வாணம் பற்றி நம் அனைவருக்கும் Read More
Calendar
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |