கடவுளை காண்போம் – பகுதி 1
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தான் இருப்பதில்லை. அவரை உணரத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. இங்கு கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கடவுளை நுகர முற்படுபவர்களே.
கடவுளை பற்றி உணர தொடங்கும் முன் அகம் புறம் பற்றிய அறிய வேண்டியது முக்கியமாகிறது. அறிவியல் ரீதியாகவும் சரி நம்பிக்கை ரீதியாகவும் சரி அகம் புறம் என்று இரு நிலைகள் இருப்பதை மறுக்க முடியாது. அகம் புறம் என்பது எல்லாவற்றிலும் இருப்பது. எதுவாகினும் அகம் புறத்திர்குள் அடக்கம். ஒரு வெள்ளை தாளில் ஒரு புள்ளியை வைத்தால், அந்த புள்ளி கொண்டிருக்கும் நிறம் அகம் அந்த புள்ளி இருக்கும் வெள்ளை தாள் புறம். அந்த வெள்ளை தாளை எடுத்துக்கொண்டால், அந்த வெள்ளை தாள் அகம், வெள்ளை தாள் வைத்திருக்கும் மேஜை புறம். இப்படியே அது சென்றுகொண்டிருக்கும் முடிவற்று.
நாம் மனிதர்கள், நம்மை எது கட்டுப்படுத்துகிறது என்று கேட்டல் மூளை என்பதே நமது பதிலாக இருக்கும். உண்மைதான் ஆனால் அதற்கும் பின்னல் இருப்பது மனம். நம்மால் முற்றிலுமாக அதை மறுக்க முடியாது. பல நேரங்களில் மூளை ஒரு ஒன்றை செய் என்று சொல்வதும் அதையே மனம் செய்யாதே என்று சொல்லுவதும் நடப்பதே. உண்மையை சொல்ல போனால் சேர்த்து வைத்த தரவுகளை கொண்டு, கணக்கிட்டு ஒன்றை செய் அல்லது செய்யாதே என்று சொல்வது மூளை. ஆனால் அதையும் தாண்டி திடீரென்று தோன்றும் எண்ணங்களுக்கு சொந்தக்காரர் நமது மனம்.
கடவுளை புரிந்துகொள்ளும் முன் நாம் நம்மையே தெரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தில் இருந்து நமக்கான உள்ளீடுகள் ஐம்புலன்களால் வருகிறது. எது ஐம்புலன்கள் ? கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்). நாம் கண்களால் பார்க்கிறோம், காதால் சப்தத்தை கேட்கிறோம், மூக்கால் சுவாசிக்கிறோம், நாக்கால் சுவை நுகர்கிறோம், உடல் மேல் இருக்கும் தோல் நமக்கான தொடு உணர்வை கொடுக்கிறது. இவை அனைத்தும் நேரடியாக மூளையால் கட்டுப்படுத்தபடுகிறது. இவை புற உணர்வுகள். அதாவது நம் மூளையால் உணரக்கூடியது இது மட்டுமே, மூளை இந்த தரவுகளை சேமித்து, அதனை கொண்டு முடிவெடுக்க செய்கிறது.
உதாரணமாக, நெருப்பின் தன்மை சுடுவது. நாம் நெருப்பை உணர்ந்தது தோலால். அதாவது நெருப்பு சுடும் என்று உணர்த்தியது தோலால் உணரப்பட்ட தொடு உணர்வு, மூளை அதனை பதித்துவைத்துக்கொண்டு, அடுத்த முறை நாம் பார்க்கும் போது அது நெருப்பு என்றும், அது நம்மீதுபட்டால் சுடும் என்றும் கணக்கிட்டு தொடதே என்ற உத்தரவை இடுகிறது.
கடவுள் என்பவர் நம்முடைய உள்ளீட்டு நிலையங்களான ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவர். இந்த ஐம்புலன்களை மட்டுமே கொண்டு உணர முடியாதவர், புற உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். கடவுளை உணர ஒரே வழி நம்முடைய மனதை புரிந்துகொள்வதே.
எது மனது என்று தெரிந்தால் தானே புரிந்துகொள்ள !!!
மனம் என்பதை பற்றிய என்னுடைய புரிதல்களை கொண்டு அடுத்த பதிவில் விளக்குகிறேன்.
—
குமார் பரமேஸ்வரன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply