நிர்வாணம்
பொதுவாக நிர்வாணம் என்பது அம்மணம். நம் அனைவருக்கும் நிர்வாணம் பற்றி தெரியும். சிலர் நிர்வாணத்தை அருவருப்பாக நினைப்பார்கள், ஆனால் நிர்வாணம் இல்லாமல் யாரும் இல்லை. நிர்வாணமும் கடவுளும் ஓன்று என நான் சொன்னால் என்னை அடிப்பதற்கு ஒரு படையே கிளம்பி விடும்.
சரி எது நிர்வாணம் ? மறைப்பதற்கு ஏதும் அற்ற நிலையை நிர்வாணம் என கொள்ளலாம் அல்லவா !!!. என்னை பொறுத்தவரை நிர்வாணம் இரண்டு வகைப்படும், அகம் புறம். புற நிர்வாணம் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும், பிறந்த மேனியாக இருப்பது. உலக பொருட்களின் மீதான பற்றற்ற நிலையின் உச்சம் புற நிர்வாணம், இது எல்லோர்க்கும் சாத்தியமும் இல்லை. அக நிர்வாணம், இது எல்லோர்க்கும் ஓரளவேனும் சாத்தியமானதே. ஆனால் இதை பற்றி நாம் பெரிதாக யோசித்ததில்லை. இதை இன்னும் எளிமையாக சொல்வதென்றால் வெளிப்படையாக இருப்பது, மனசாட்சியுடன் இருப்பது. சரி இதைப்பற்றி நீ ஏன் பேசுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம், என்னால் வெளிப்படையாக இருக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இதை எழுதிக்கொன்டிருக்கிறேன். மனதை குப்பைமேடாக மாற்றாமல் இருக்க வெளிப்படையாக இருப்பது நிச்சயம் உதவும்.
ஒரு சின்ன உதாரணம், பெரும்பாலும் நான் அலுவலகத்திற்கு காலதாமதமாக செல்வதற்கு காரணம் என்னுடைய சோம்பேறித்தனம், பின்ன காலையில் ஒன்பது மணி அலுவலகத்திற்கு, எட்டு மணிக்கு எழுந்தால் ஒன்பதரை ஒன்பதே முக்காலுக்கு தான் சென்றடைய முடியும். இங்கு என்குழு தலைவரிடம் ட்ராபிக் என்று தான் சொல்ல முடியும். சரி அது ஒரு உண்மையான காரணமாகவே இருந்தாலும் அது நான் கடந்து வரக்கூடியதே. காலையில் ஆரம்பிக்கும் காரணம் அந்த நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். காரணங்கள் மனதிற்குள் குப்பையை சேர்த்துக்கொண்டே இருக்கின்றன. இனியாவது முடிந்த அளவு வெளிப்பிடையாகவே இருக்கமுயல்கிறேன்.
நல்லது நடக்க நல்லது நினைக்க வேண்டும், நல்லதை நினைக்க வெளிப்படையாக இருப்பது உதவும் என நினைக்கறேன்.
—
குமார் பரமேஸ்வரன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply