என்னை பற்றி

Kumar Parameswaran

குமார் பரமேஸ்வரன் என்னும் நான் 1987 டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தேன். சொந்த ஊர் கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். LKG, UKG ஐ அப்போது எங்கள் கிராமத்தில் மிகவும் சிறப்பாக இயங்கிகொண்டிருந்த காந்தி கல்வி நிலையத்திலும், ஓன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (தெற்கு) யிலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மேல்நிலை வகுப்பை அப்போதைய கால கட்டத்தில் மிகவும் கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்ற ஐடியல் மேல்நிலைபள்ளியிலும் முடித்தேன்.

ஈரோடு செங்குந்தார் பொறியியல் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு பொறியியலில் கணினி அறிவியல் பயின்று வேலையில்லாமல் ஒருவருடம் கணினி மேலாண்மையில் ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படித்து, பின் எனது அண்ணனின் உதவியால் அவரது நண்பரின் “XAVY Technologies” என்னும் நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு “System Administrator”ஆக பணியாற்ற துவங்கினேன், பின் 2012 ஆம் ஆண்டு “AES Technologies” என்னும் நிறுவனத்திற்கு மாறி தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

கணினியிலும் ஆன்மீகத்திலும் சித்தரியலிலும் வரலாற்றிலும் அதிக ஈடுபாடு உண்டு. ஆன்மீகத்தையும் அறிவியலையும் குழப்பி ஒரு தெளிவுகாண முயலும் எளியன். என் முப்பதாண்டு வாழ்க்கை பயணத்தில் பல அனுபவங்கள் பெற்று இன்னும் இதனை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிகொண்டுள்ளேன். பெற்ற அனுபவங்களை பொறுமையாக யோசிக்கவும் எனக்கு நேரம் கிடைத்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த வலைத்தளங்கள். இது தவிர இன்னும் இரண்டு வலைதளத்தை இயக்கிகொண்டுள்ளேன்.

வேலும் மயிலும் துணை – பக்தி பாடல்களுக்காக…
Administration Notes – கணினி மேலாண்மையில் எனது குறிப்புகள்…