கபாலிடா நெருப்புடா…
உண்மையாகவே கபாலி என்பது நெருப்பை போல உலகம் முழுவது பற்றிக்கொண்டுவிட்டது. கபாலி என்ற பேர் வெளிவந்தவுடன் புகைய ஆரம்பித்தது டீச்சரில் எரிய ஆரம்பித்து தேதி அறிவிக்கப்பட்டபின் நன்றாகவே கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டது.
ஒருவேளை ஐந்து வருடம் கழித்து கபாலியா அப்படினா, என்னும் கேள்வி வந்தால், 99.99% வராது, ஒருவேளை வந்தால், கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம்.
எந்தபக்கம் பார்த்தாலும் கபாலி போஸ்டர், எங்க பாத்தாலும் நெருப்புடா நெருங்குடா னு வாசகம். கிட்ட தட்ட தீபாவளி கொண்டாட்டம் போல பரவச நிலையில் மக்கள், ஏர் ஆசியா விமானத்தில் கபாலி பட போஸ்டர், கோவையில் ஓடும் கார் வேன்னில் 30% கபாலி போஸ்டர், தனியாருக்கு சொந்தமான நோ என்ட்ரி போர்டில் கபாலி, ஆடி கார் முதல் மாருதி 800 வரை கபாலி, எப்எம் போட்டால் கபாலி, டிவி போட்டால் கபாலி, சலூன் கடை , டீ கடை, துணி கடை எல்லா பக்கமும் கபாலி….
கபாலி வெளிவந்துவிட்டது, விமர்சனங்கள் எல்லாம் பெரும்பாலும் வந்துவிட்டன, இணையத்தில் படமே வந்துவிட்டது. படம் எப்படி என்பதை தாண்டி, படத்திற்க்கான விளம்பரம் விண்ணையே தொட்டுவிட்டது. ரஜினி என்ற பிராண்டை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்த முயற்சித்திருக்கிறார் தயாரிப்பாளர். பில்ட்அப் பண்றமோ பீலா உடரமோ, நம்மளபத்தி நாலு பேரு பேசணும், அத தெளிவா பண்ணியிருக்கார். பல வசூல் சாதனைகளையும் முறியடித்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
எனக்கு ஒருவிசயம் தெளிவாக புரிந்துவிட்டது. நாம் இந்த உலகில் வாழவேண்டும் என்றல், எதாவது ஒரு வகையில் நம் இருப்பை கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அதை தான் தயாரிப்பாளர் தெளிவாக செய்திருக்கிறார்.
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply