கடவுளை காண்போம் – பகுதி 2
சென்ற பதிவில் கடவுள் யார் என்பதற்கான எனது புரிதல்களையும் புறம் பற்றியும் பகிர்ந்தேன், இந்த பதிவில் மனம் பற்றியான எனது புரிதல்களையும், கடவுளை உணரக்கூடியதர்கான நம்பிக்கை சார்ந்த புரிதல்களையும் பகிர்கிறேன்…
எது மனம் ?
என்னை பொறுத்தவரை நமக்குள் இருக்கும் ஆத்மா (உயிர்) அதாவது இயக்க சக்தியை மையமாக கொண்டு நம்மை சுற்றி பரவி இருக்கும் ஒரு ஈர்ப்பு விசை மனம். மனத்திற்கு எல்லைகள் கிடையாது நினைத்தமாத்திரத்தில் எங்கும் பரவும் ஆற்றல் மனத்திற்கு உண்டு. என்னுடைய புரிதல்படி மனதை அடக்கமுடியாது. ஆனால் மனதை நாம் நினைக்கும் வழியில் செலுத்த முடியும். மனதை சரியான பாதையில் செலுத்துவதன் மூலமே நம்மால் கடவுளை உணர முடியும்.
பல கட்டுரைகளில் மனம் என்பதை நினைவுகளின் தொகுப்பாகவே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் வெறும் நினைவுகளின் தொகுப்பாக இருக்கும்பட்சத்தில் பல நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இல்லாமல் போயிருக்கும். நம்மால் சிலவற்றை வார்த்தைகளால் உணர்த்த முடியாது, அத்தகைய ஓன்றுதான் மனம்.
“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்று சொல்வதும், “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” எனகிற சித்தர் வாக்கும் மனத்தின்னை பற்றி விளக்கும். நம்மை நாமே தெரிந்துகொள்ள மனமே மூலதனம், கடவுளை உணர்ந்துகொள்ள தன்னை அறித்தலே மூலம்.
மனம் மூன்று நிலைகளில் இருப்பதாக சித்தர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். புத்தி, சித்தி மற்றும் முக்தி. புத்தியில் நான் என்ற அகங்காரம் கொண்டு, அனைத்திலும் நானே உயர்ந்தவன் என்று இருத்திக்கொள்வது, இதனால் நமக்கு துன்பம் மட்டுமே பிரதானமாக கிடைக்கும். அடுத்து சித்தி நிலை, தன்னை உணரும் நிலை, நான் யார், எதற்கு இந்த பிறப்பு, கடவுள் யார் போன்ற பல கேள்விகளை தனக்குள் கேட்டு விடை பெற முயல்வது. இன்பம் துன்பம் அனைத்தையும் கடவுளின் செயலக மட்டுமே பார்ப்பது. அடுத்து முத்தி நிலை, தன்னை அறிந்த நிலை. இன்பம் துன்பம் அனைத்தையும் கடந்த பேரானந்த நிலை. தன்னை அறிந்தபின் தனக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்த நிலை.
இவை அனைத்தும் என்னுடைய புரிதல்கள் மட்டுமே, இவை தவறாக கூட இருக்கலாம். ஆனால் ஓன்று மட்டும் நிச்சியம், மனம் என்பது சாதாரண நினைவுகளின் தொகுப்பு அல்ல. அது எல்லையற்று பரவியிருக்கும் ஒரு சக்தி. நமது மனம் சரியான அலைவரிசையில் பயணம் செய்தால் அனைத்துமே வெற்றியாக அமையும்.
கடவுளை எங்கே தேடுகிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி தேடுகிறோம் என்பதே பிரதானம். கடவுள் என்பவர் எங்கும் நிறைந்து இருப்பவர். அதனால் நாம் எங்கு தேடினாலும் கடவுளை உணர முடியும். ஆனால் நமது தேடல் உள்ளன்புடனும் தீர்க்கமாகவும் இருக்கவேண்டும். அதற்கு ஒரே ஊடகம் நமது மனம். மனம் நாம் சொல்வதை கேட்கும்பட்சத்தில் நம்மால் கடவுளை எளிமையாக உணர முடியும். அதாவது மனதை நாம் விரும்பும் அலைவரிசைக்கு திருப்பும்பட்சத்தில் கடவுளை உணரலாம்.
சரி கடவுள் ஆணா இல்லை பெண்ணா ? கடவுளை ஆண் என பார்த்தல் ஆண், பெண் என பார்த்தல் பெண். கடவுளே இல்லை என்கிற நாத்திகர்க்கு அவர்களின் நம்பிக்கையே கடவுள்.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றல், உருவமற்ற, எதையும் சாராத, மனதால் மட்டுமே உணரக்கூடிய, நம்மை தாண்டி அதீத பலம் கொண்டு, எங்கும் பரவி இருக்கும் ஒரு சக்திதான் கடவுள்.
மற்றொரு பதிவில் கடவுளை அறிவியலுடன் ஒப்பிட்டு பகிர்கிறேன். அது உங்களை மேலும் குழப்பும் அல்லது கடவுளின் இருப்பை உணரவைக்கும். குழம்ப குழம்ப மட்டுமே தெளிவு பிறக்கும்.
—
குமார் பரமேஸ்வரன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply