அறிமுகம்
என் பெயர் குமார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுந்தப்பாடி என் ஊர். கோவையை தலைமையாக கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி நிர்வாகியாக பணியாற்றி வருகிறேன்.
என் எண்ணங்களில் தோன்றுவதை பதிவு செய்யும் ஒரு வெறிடமாக இதை பார்க்கிறேன். பள்ளி காலங்களில் பாடங்களில் வரும் கட்டுரைகள் எழுதியது அதன் பிறகு இப்பொழுது தான் எழுத தோன்றுகிறது. எதாவது எழுதவேண்டும் , எல்லாவற்றையும் மனதினுள் வைத்து அதை குப்பை தொட்டியக்குவதில் விருப்பமில்லாமல் இங்கு வந்து கொட்ட விழைகிறேன். இது பூந்தோட்டமாகிறதா இல்லை குப்பை மேடாகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும். எனது சிவ தேடல் பயணங்கள் நிச்சயம் இதை பூந்தோட்டியாகவாவது மாற்றும் என்பது என் எண்ணம்.
இது எனக்கே எனக்கான பகுதி, கடவுள் முதல் காமம் வரை , ஆணியம் பெண்ணியம் என அனைத்தும் பேசுவேன். அதுக்காக போர்கொடி எல்லாம் தூக்கி கொண்டு வந்துவிடாதீர்கள். நான் அந்த அளவிற்கு ஒப்பானவன் இல்லை. இப்பொழுது எல்லாம் இணைய உலகில் பல பேர் எழுதுகிறார்கள் அவர்கள் எல்லாம் வீடு கட்டி அமர்ந்திருக்கும் தெருவில், தெரு கோடியில் நிற்க இடமில்லாமல் நின்றுகொண்டிருப்பவன் நான். படித்துவிட்டு சொல்லுங்கள்.
நன்றி,
குமார் பரமேஸ்வரன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply